இந்தியப் பெருங்கடல் கடலோர கூட்டணியில் இணைகிறது இலங்கை
இந்து சமுத்திர கடலோர அரசுகளின் கூட்டணியை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்குரிய யோசனையை கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேர் அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (20) நடைபெற்றது.
இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர் , அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,
“ சூரை மீன் Tuna fish மீன்பிடித் தொழிலானது இந்து சமுத்திர வலயத்தின் தேசிய பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு என்பவற்றுக்கு அதிகளவில் பங்களிப்பு வழங்குகின்றது.
அதேபோல தொழில் உருவாக்கம் மற்றும் கடலோர சமூகத்தவர்களின் சமூக பொருளாதார உறுதிப்பாட்டுக்கும் உந்து சக்தியாக அமைந்துள்ளது.
எனினும், அதிகளவான மீன்களைப் பிடிப்பதால் மீன்கள் குறைவடைந்து ணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனவே, சூரை மீன் வளங்கள் முகாமைத்துவத்தில் ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்துவதற்காக இந்து சமுத்திரத்தின் கடலோர அரசுகளின் கூட்டணியை உருவாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
பங்களாதேஷ், இந்தோனேசியா, ஈரான், மடகஸ்கார், மலேசியா, மாலைதீவு, மொசம்பிக், பாகிஸ்தான், சோமாலியா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றின் மூலம் இதனை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
உறுப்பு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்புக்களை அதிகரித்தல், மீனவ சமூகத்தவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரித்தல், இயலளவை கட்டியெழுப்புதல் மற்றும் மீன் வளங்களைப் பேண்தகு வகையில் முகாமைத்துவம் செய்தல் போன்ற நோக்கங்களுக்காகவே குறித்த கூட்டணி உருவாக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே இந்து சமுத்திரத்தின் கடலோர அரசுகளின் கூட்டணியை தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.”- என்றார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.
Reviewed by Vijithan
on
January 21, 2026
Rating:


No comments:
Post a Comment