சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினம் இன்று(04) இடம்பெறும் நிலையில் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என தெரிவித்து வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வடக்கு கிழக்கு வலிந்து கானாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் மற்றும் தாயக செயலனி உள்ளிட்ட வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள் இணைந்து அழைப்பு விடுத்திருந்தனர்
அந்தவகையில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என தெரிவித்து மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்கள் வடக்கு மாகாணத்தின் ஜந்து மாவட்டங்களின் வலிந்து கானாமலாக்கப்பட்டோர் சங்க உறவுகளின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்த மாபெரும் போராட்டத்தில் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கோடு எங்கள் தாய் நிலத்தை ஆக்கிரமிக்காதே, இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ்தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார், நீங்கள் வழங்கிய சுதந்திரத்தை பேரினவாதிகள் தட்டிப்பறிப்பதை அனுமதிப்பது ஏன், வட்டுக்கோட்டை தீர்மானம் வழிகாட்டி சுய நிர்னயம் எங்கள் உரிமை, ஆக்கிரமைப்பு முடிவடைய வேண்டும் தமிழர் தாயகம் தன்னாட்சிபெற வேண்டும் எனும் பதாதைகளை தாங்கியவாறு ம்
எங்கே எங்கே உறவுகள் எங்கே, வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், வேண்டாம் வேண்டாம் கிவுல் ஓயா திட்டம் வேண்டாம் , சுதந்திர மற்ற நாட்டில் சுதந்திர தினம் எதற்கு உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியை அடைந்து அங்கு நிறைவடைந்தது குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மதகுருமார் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், துரைராசா ரவிகரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், காணாமலாக்கப்பட்டோர்களின் உறவினர்கள் , சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டதுடன், போராட்டத்தின் கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
February 04, 2026
Rating:









No comments:
Post a Comment