அண்மைய செய்திகள்

recent
-

ரணிலுக்கு பிணை வழங்கியது சிக்கலா?

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார் என்ற முடிவுக்கு வருவதற்குப் போதுமான காரணங்கள் இல்லாத போதே அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார இன்று (18) தெரிவித்தார்.

 

உத்தியோகபூர்வ விஜயமெனக் கூறி, தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு 16.6 மில்லியன் ரூபா அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

இவ்வழக்கின் முதலாவது சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்தக் குற்றத்தைப் புரிவதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தொடர்பான பிணை உத்தரவை அறிவிப்பதற்காகவே வழக்கு இவ்வாறு அழைக்கப்பட்டது.

 

அதனையடுத்து, 21 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பிணையில் விடுவிக்கக் கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.





ரணிலுக்கு பிணை வழங்கியது சிக்கலா? Reviewed by Vijithan on February 19, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.