அண்மைய செய்திகள்

recent
-

அதிகாரி இல்லை; வவுனியாவில் அலைக்கழிக்கப்படும் மக்கள்

  வவுனியா சிங்கள பிரதேச செயலகத்தில் பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள் பெறுவதில் பொதுமக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.


வவுனியா சிங்கள பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள மேலதிக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு பிறப்பு - இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக செல்லும் பொதுமக்களை அங்குள்ள உத்தியோகத்தர்கள்,சான்றிதழ்களில் கையோப்பம் இடுவதற்கு அதிகாரிகள் இல்லை என திருப்பி அனுப்பி வருகின்றதாக கூறப்படுகின்றது.



மக்கள்  ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலமை


அங்குள்ளவர்கள் , வேறு பிரதேச செயலங்களுக்கு செல்லுமாறு தெரிவித்துள்ள மக்கள்  தமக்கு ,  தமக்கு நிரந்தர பதிவாளர் இன்மையினால் அடிக்கடி இவ் நிலமை ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.


இதனால் பல தடவைகள் ஏமாற்றத்துடன் மக்கள் திரும்ப வேண்டிய நிலமையும் உருவாகியுள்ளமையுடன் இவை பொதுமக்களை அலைக்கழிக்கும் செயலாகவும் அமைந்துள்ளது.




எனவே உயர் அதிகாரிகள் இது தொடர்பில் தலையிட்டு மக்களுக்கு திறன்பட சேவையினை வழங்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






அதிகாரி இல்லை; வவுனியாவில் அலைக்கழிக்கப்படும் மக்கள் Reviewed by Vijithan on February 17, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.