அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகம் சத்தியப்பிரமாணம்!

 புதிய கணக்காய்வாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்ட சமுதிகா ஜயரத்ன, இன்று (05) பாராளுமன்றத்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இரகசியக் காப்பு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 


2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 9 ஆம் பிரிவின் பிரகாரம், தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வாளர் நாயகமாகவும் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராகவும் அவர் இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 

நாட்டின் 42-வது கணக்காய்வாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள இவர், இப்பதவியை வகிக்கும் இலங்கையின் முதலாவது பெண் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார். 

இந்நிகழ்வில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.




இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகம் சத்தியப்பிரமாணம்! Reviewed by Vijithan on February 05, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.