மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கும் எச்சரிக்கை
இலங்கைக்கு வடகிழக்கே மத்திய வங்கக் கடல் பகுதியில் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (24) பிற்பகல் 2.00 மணியளவில் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வடகிழக்கே மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்த பிரதேசம் கிழக்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் வலுவிழக்கும் என அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக, வரைபடத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள கடல் பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், மணிக்கு 50 - 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கும் எச்சரிக்கை
Reviewed by Vijithan
on
February 24, 2026
Rating:
Reviewed by Vijithan
on
February 24, 2026
Rating:


No comments:
Post a Comment