அண்மைய செய்திகள்

recent
-

-மன்னாரில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் -பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு -மன்னாரில் இருந்து இளவன் குளம் ஊடாக புத்தளத்திற்கு செல்லும் பிரதான வீதியை திறந்து வைக்க கோரிக்கை.

 மன்னார் மாவட்ட போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.


மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் ஒருங்கமைப்பில் அமைச்சர் பிமல் ரத்னாயக்கா தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான்,சத்தியலிங்கம்,ரவிகரன்,ஜெகதீஸ்வரன்,திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் அமைச்சின் செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள்,பிரதேச செயலாளர்கள்,கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.


இதன் போது  மன்னார் நகர சபை,மன்னார்,நானாட்டான்,மாந்தை மேற்கு,முசலி ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்ற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி பணிகள் உள்ளிட்ட பல்வேறு விடைங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.


   குறிப்பாக மன்னார் மாவட்டத்தின்   வீதிகள் புனர் நிர்மாண வேலைகள், போக்குவரத்து, நகர அபிவிருத்தி மற்றும்  சுற்றுலாத்துறை மேம்பாடுகள்  தொடர்பான  விடயங்கள் உரிய திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன.


-மேலும்  மன்னாரில் இருந்து   முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இளவன் குளம்  ஊடாக புத்தளத்திற்கு செல்லும் பிரதான வீதியை  திறந்து மக்களின் பாவனைக்கு விடுமாறு அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


-இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல்  ரத்நாயக்க



 மன்னார் மாவட்டத்தில், போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்புடைய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.


எதிர்வரும் காலத்தில் , இந்த போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  குறைந்தது ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறையாவது தொடர்ந்து கூடும் என நாங்கள் பெரும் நம்பிக்கை கொள்கிறோம்.


ஆளும் கட்சி மற்றும்  எதிர்க்கட்சியைச் சேர்ந்த  பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் பிரதேச சபைத்  தலைவர்கள்,  நகர சபைத் தலைவர் இடைக்கால நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

 எமது அமைச்சரவை சார்ந்த பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.


இதன் மூலம், ஒரு அளவிற்கு தீர்வுகளைப் பெற முடிந்ததாக நாங்கள் கருதுகிறோம்.


 இந்த அரசியல் தலைவர்களும்  நிர்வாக தலைவர்களும்  திட்டமிட்டுள்ள வகையில் இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை  வழங்குவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம், என்றார். 











-மன்னாரில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் -பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு -மன்னாரில் இருந்து இளவன் குளம் ஊடாக புத்தளத்திற்கு செல்லும் பிரதான வீதியை திறந்து வைக்க கோரிக்கை. Reviewed by Vijithan on February 10, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.