அண்மைய செய்திகள்

recent
-

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் முல்லைத்தீவு மீனவர் சங்கங்கள்

 சட்டவிரோத மீன்பிடி  நடவடிக்கைகளை அரசு கட்டுப்படுத்த நினைக்கும்போது அதனை எதிர்த்து  செயற்படுத்துகின்றவர்களுக்கு அரசு துணை போகக் கூடாது என  முல்லைத்தீவு  மீனவர் சங்கங்கள்.கடுமையான எதிர்ப்பை  வெளியிட்டுள்ளனர்


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆதிவைரவர், சித்திவிநாயகர், ஸ்ரீமுருகன், அன்னைவேணாங்கன்னி, சென்யூட், முள்ளிவாய்கால் கிழக்கு ஆகிய மீனவர் சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் ஒன்றாக கூடி கலந்துரையாடிய பின்னர்  சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராக நேற்று  (9) ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.


குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் கருத்து  தெரிவிக்கையில் மீன்பிடியில் தடைசெய்யப்பட்ட விடயங்கள் தடைசெய்யப்பட்டதாகவே காணப்பட வேண்டும் எனவும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளுக்கு இலங்கை அரசாங்ம் அனுமதி வழங்கக்கூடாது எனவும், உழவு இயந்திரம்  பாவித்து    கரைவலைத் தொழிலில் ஈடுபடுவதால்  பல்வேறு பாதிப்புக்கள் ஏற்ப்படுத்தலாம்   தெரிவித்தனர்.


தொடர்ந்து ஜனாதிபதி செயலகம் முன்பாக முல்லைத்தீவு என குறிப்பிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் குறித்த போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட கரவலை சம்மாட்டிகள் எவரும் அங்கு இல்லை எனவும் தமக்கு அரசாங்கத்திலும் கடல்தொழில் அமைச்சரிலும் நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தனர்.


அவர்கள் மேலும் தெரிவிக்கையில் சுருக்குவலை, லைட் பாச்சுதல் மற்றும் டைனமேட் அடித்து மீன்பிடித்தல் மிகவும் தவறான தொழில் எனவும் சிலர் அவ்வாறு செய்வதால் தமது சிறுதொழில் வாழ்வாதாம் பாதிப்படைவதாகவும், தாம் முல்லைத்தீவு மாவட்டத்தில் எத்தனையோ போராட்டங்கள் செய்ததாகவும் மீன்பிடி தொடர்பில் சட்டத்தில் காணப்படும் விடயங்களை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை முன்வைத்தனர்.


தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் சிலர் சட்டவிரோத மீன்பிடி செய்வதால் தமக்கும் ஏனைய சமூகத்திற்கும் முரன்பாடுகள் வருவதாகவும் தெரிவித்ததுடன், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளுக்கு எச் சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கக்கூடாது எனவும் அவ்வாறு அனுமதி வழங்கினால் தமது வாழ்வாதாரம் பாதப்படைவதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன் சட்டத்தை போடும் அரசாங்கம் அதனை கருத்தில்கொண்டு கடல் தொழிலில் உழவு இயந்திர பாவனை மற்றும் சுருக்குவலை டைனமற்  உட்பட சட்டவிரோத தொழில் முறைகளை முற்றாக நிறுத்தி தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.















சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் முல்லைத்தீவு மீனவர் சங்கங்கள் Reviewed by Vijithan on February 10, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.