மடு-பாலம்பிட்டி பிரதான வீதியில் உயிருக்கு போராடும் யானை.
-மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலம்பிட்டி பிரதான வீதிக்கு அருகில் காட்டு யானை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (6) காலை முதல் உயிருக்கு போராடி வருகிறது.
சுமார் 10 வயது மதிக்கத்தக்க தாக கூறப் படுகின்ற குறித்த யானை எழும்பி நடக்க முடியாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் வியாழக்கிழமை (5) இரவு குறித்த பகுதிக்கு யானை கூட்டம் ஒன்று வருகை தந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் பொலிஸ் மற்றும் வனவள திணைக்கள அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
குறித்த யானையை அப் பகுதியூடாக செல்லும் மக்கள் பார்வையிட்டுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது
மடு-பாலம்பிட்டி பிரதான வீதியில் உயிருக்கு போராடும் யானை.
Reviewed by Vijithan
on
February 06, 2026
Rating:
Reviewed by Vijithan
on
February 06, 2026
Rating:

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

No comments:
Post a Comment