பலாபழத்தில் வழுக்கியதால் உயிரிழந்த சிறுமி
வீதியில் விழுந்து கிடந்த பலாப்பழம் ஒன்றில் உந்துருளி வழுக்கி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்து கண்டி தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கேகாலை, அத்தனகொட, கரடுப்பனவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயது மற்றும் 11 மாதங்கள் உடைய சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த போது விபத்து
கடந்த 2ஆம் திகதி, சிறுமி தனது தாய் மற்றும் தந்தையுடன் உந்துருளியில் கேகாலை, மொலகொட ஊடாக அத்தனகொட வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, மொலகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வீதியில் விழுந்து கிடந்த பலாப்பழத்தின் மீது உந்துருளி வழுக்கியதே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து நடந்த இடம் சரிவான பகுதி என காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தினால் கடும் அதிர்ச்சிக்கும் மனவேதனைக்கும் உள்ளான சிறுமியின் தந்தை, விஷம் அருந்திய நிலையில் கேகாலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Reviewed by Vijithan
on
February 11, 2026
Rating:


No comments:
Post a Comment