மன்னாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சமூக, கலாச்சார கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் இடம் பெற்ற பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு.
மன்னாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சமூக, கலாச்சார கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கு நேர்வழி காட்டும் “Future Leaders” திட்டத்தின் கீழ் நடத்தப்படும் “Islamic Life Studies” 7 நாள் பயிற்சி நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ள சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (13) மாலை இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சமூக கலாச்சார கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் தாராபுரம் அல் மினா மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன்,சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் மறைக்கார். கலந்து கொண்டார்.
அத்துடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், , உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை மன்னார் புதுக்குடியிருப்பு கிராமத்தில் பயிற்சி யை பூர்த்தி செய்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
ரமலான் காலத்தில் இளைஞர்களின் இஸ்லாமிய நெறி, சமூகப் பொறுப்பு மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டம்,வடக்கு கிழக்கில் சுமார் 1000 மாணவர்கள் பயனடைந்துள்ளது டன். 20க்கும் மேற்பட்ட நிலையங்களில், 35க்கும் மேற்பட்ட திறமையான வள வாளர்களின் பங்களிப்புடன், ஒரே பாடத்திட்டத்தின் கீழ் இப்பயிற்சி திட்டம், கட்சியின் கல்வி பிரிவினால் ஒழுங்கு படுத்தப் பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது .
Reviewed by Vijithan
on
March 13, 2026
Rating:



.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)


No comments:
Post a Comment