அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான வரி பரிசோதகர் பாம்புக்கடிக்கு இலக்காகி மரணம்

 முன்னைநாள் துணுக்காய் பிரதேச சபையின் வருமான வ‌ரி பரிசோதகரும் துணுக்காய் முத்துமாரி அம்மன் ஆலய தர்மகத்தாவும் தற்போது மாந்தை கிழக்கு  பிரதேச சபையின் வருமான வரி  பரிசோதகராக கடமையாற்றிய திருநாவுக்கரசு கிருபாகரன் பாம்புக்கடிக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார் 


துணுக்காய் பகுதியை சேர்ந்த  ஒரு பிள்ளையின் தந்தையான  55 வயதுடைய திருநாவுக்கரசு கிருபாகரன்  என்பவரே இவ்வாறு பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்தவராவார் 


இவர் மாந்தை கிழக்கு  பிரதேச சபையின் வருமான பரிசோதகராக தற்போது கடமை ஆற்றி வருகிற நிலையில் இன்று துணுக்காய் பகுதியில் வயலின் வேலை செ‌ய்து கொண்டிருந்த போதே இவ்வாறு பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 


உடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள அதேவேளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்







மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான வரி பரிசோதகர் பாம்புக்கடிக்கு இலக்காகி மரணம் Reviewed by Vijithan on March 12, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.