புதுக்குடியிருப்பில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம் 2026
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு பிரதேச மகளிர் அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஏற்ப்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் 11.03.2026 புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன் விழா மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
முன்னதாக விருந்தினர்கள் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு மகளிர் குழுக்களின் பான்ட் வாத்திய இசையுடன் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன் விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர்
அதனைத்தொடர்ந்து மகளிர் குழுக்களின் இசையும் அசைவும் நிகழ்வை தொடர்ந்து விருந்தினர்கள் விழா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன
இதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த 19 சாதனைப் பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த மகளிர் தின நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளர் ( நிர்வாகம்) திருமதி எ அன்ரன் யோக நாயகம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார் கௌரவ விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி கி டென்சியா உடையார்கட்டு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் திருமதி பொ. செல்வரஞ்சினி சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் திருமதி சி.தங்கமயில் உள்ளிட்ட அதிதிகளும் பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர்கள் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்
Reviewed by Vijithan
on
March 12, 2026
Rating:


.jpg)

.jpg)





No comments:
Post a Comment