வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்ற புத்தரிசி விழா
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான 2026 ஆம் ஆண்டுக்கான புத்தரிசி விழா 23.03.2026 திங்கட்கிழமை வற்றாப்பளை
கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில்
சிறப்பாக இடம்பெற்றது
முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பிரான்சிஸ் கனியூட், தலமையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்று கறியமுதம் பரிமாறி 2026 ஆம் ஆண்டுக்கான புத்தரிசி விழா சிறப்பாக இடம்பெற்றிருந்தது
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி இமக்குலேற்றா புஷ்பானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தார்கள்.
Reviewed by Vijithan
on
March 25, 2026
Rating:


No comments:
Post a Comment