சர்வதேச மகளிர் தினமும் கௌரவிப்பு நிகழ்வும்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக சர்வதேச மகளிர் தினமும் கௌரவிப்பு நிகழ்வும்.நேற்றைய தினம் (24.03.2026 ) கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது
கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் இ.விஜயகுமார் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 16 பெண்கள் முக்கியமாக சமூக செயற்பாட்டாளர்கள், தொழில் முயற்சியாளர்கள், மாற்றத்தை ஏற்படுத்தும் பெண்கள், சிறந்த பெண் தலைமைத்துவம் என வகைப்படுத்தப்பட்ட வகையில் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அகிலத்திருநாயகி அம்மா அவர்களும் அதனுடன் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்
பிரதேச செயலக உத்தியோகத்தர்களது ஒத்துழைப்புடன் குறித்த நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது
Reviewed by Vijithan
on
March 25, 2026
Rating:


No comments:
Post a Comment