அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் போத்தல் கள்ளில் இறந்த நிலையில் பல்லி

 மன்னாரில்   போத்தலில் அடைக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்பட்ட போத்தல் கள்ளில்   இறந்த பல்லி ஒன்றின் முழு உடல் காணப்பட்டமை போத்தல் கள்ளு  பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


மன்னாரில் உள்ள  போத்தல் கள்ளு விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று இரவு (29) கொள்வனவு செய்யப்பட்ட கள்ளு போத்தலிலேயே மேற்படி இறந்த பல்லியின் உடல் முழுவதுமாக கிடந்துள்ளது


இந்த நிலையில் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களின் கவனத்துக்கு குறித்த விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது


மன்னார் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இயற்கையான பனம் கள்ளு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் பலர் அவற்றை கொள்வனவு செய்யாது போத்தல்களில் அடைக்கப்பட்ட கள்ளை கொள்வனவு செய்து அருந்தி வரும் நிலையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது













மன்னாரில் போத்தல் கள்ளில் இறந்த நிலையில் பல்லி Reviewed by Vijithan on March 30, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.