மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் ஆயர் தலைமையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு திருப்பலி- ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மறுதினம் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் உயிர்த்த ஞாயிறு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் (04) இரவு நாடளாவிய ரீதியில் மக்கள் உயிர்த்த ஞாயிறு வழி பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம்பெற்றதுடன் தேவாலயங்களுக்கு பாதுகாப்புக்கு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று (04) சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
திருவிழா திருப்பலி இடம்பெற்ற போது ஆலயத்தை சூழ பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதன் போது ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தனர்.
Reviewed by Vijithan
on
April 05, 2026
Rating:


No comments:
Post a Comment