முதலாம் தர மாணவர்களுக்கான பயிற்சி நூல்கள் விநியோகம் ஆரம்பம்
2026ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவிக்கையில், முதலாம் தர மாணவர்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளுக்குரிய பயிற்சி நூல்களை விநியோகிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்குள் அனைத்து பாடசாலைகளுக்கும் இந்த நூல்களை விநியோகித்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களுக்கான மேலதிக பயிற்சிகளை மே 16ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு மாகாணப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
முதலாம் தவணைப் பாடப்பரப்புகளைப் பூர்த்தி செய்யாத பாடசாலைகள், அவற்றை இரண்டாம் தவணையில் நிறைவு செய்யுமாறு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நவீன கல்வி முறையின் ஊடாக மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்துவதே இந்தச் சீர்திருத்தத்தின் பிரதான நோக்கமாகும்.
Reviewed by Vijithan
on
April 17, 2026
Rating:


No comments:
Post a Comment