அண்மைய செய்திகள்

recent
-

லெபனானில் இடம்பெற்ற தாக்குதல் - நால்வர் பலி - பலர் காயம்

 லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியிலுள்ள ஜனா (Jnah) பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனானின் அரச தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


அந்நாட்டு சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்தத் தாக்குதலில் மேலும் 39 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 

லெபனான் தலைநகரில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் இன்று (5) காலை தெரிவித்தது. 

இன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களை அடுத்து, தெற்கு பெய்ரூட் பகுதிகளில் இருந்து புகை மூட்டம் எழுவதை அங்கிருந்து வௌியாகியுள்ள புகைப்படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. 

இதற்கு முன்னதாக, தெற்கு லெபனானின் க்பர் ஹட்டா (Kfar Hatta) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









லெபனானில் இடம்பெற்ற தாக்குதல் - நால்வர் பலி - பலர் காயம் Reviewed by Vijithan on April 05, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.