யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி
தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று (மே 18) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.
இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு பூபியில் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட, ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டு, அக வணக்கம் செலுத்தப்பட்டு, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தல்
பின்னர் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், முன்னாள் போராளிகள், தமிழ் தேசிய உணர்வார்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது யாழ்ப்பாணத்தில் இருந்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முள்ளிவாய்க்கால் சென்றமையும் குறிப்பிடதக்கது.
Reviewed by Vijithan
on
May 18, 2026
Rating:


No comments:
Post a Comment