அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக மாலை நேர தையல் பயிற்சி ஆரம்பம்.

 மன்னார் ஜீவ ஊற்று அன்பின் கரம் அலுவலகம் ஊடாக மன்னார் பனங்கட்டுக்கொட்டு பகுதியில் பெண்களுக்கான தையல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது கட்டமாக மாலை நேர தையல் பயிற்சிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர்  தயாளினி ஜோன்   வழி காட்டுதலில் ,ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் மதனின் மேற்பார்வையில் குறித்த தையல் பயிற்சிகள் இடம் பெற்று வருகிறது.


காலையில் ஒரு பிரிவினருக்கும் ,மாலையில் மேலும் ஒரு பிரிவினருக்குமாக இரண்டு பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


'ஜீவ ஊற்று அன்பின் கரம்' அமைபின் ஸ்தாபகர் பெல்ஜியத்தில் வசித்து வரும் ஜெஜீவனின் வழி காட்டுதலில் இலங்கையின் பல இடங்களில் தமது மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.


'ஜீவ ஊற்று அன்பின் கரம்' அமைப்பு முல்லைத்தீவை தலைமை அலுவலக மாகவும்,கிளைகளை கிளிநொச்சி,மன்னார்,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நிறுவி தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.


மன்னாரில் இரண்டாவது பிரிவாக குறித்த தையல் பயிற்சி மாலை நேர வகுப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.குறித்த தையல் பயிற்சிக்கு அனுசரணையை சுவிஸ்லாந்தைச் சேர்ந்த மங்கையம்மா மற்றும் லண்டனைச் சேர்ந்த பாபு ஆகியோர் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















மன்னார் ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக மாலை நேர தையல் பயிற்சி ஆரம்பம். Reviewed by Vijithan on May 22, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.