அண்மைய செய்திகள்

recent
-

காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற மூவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்

காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் இன்று (10) பிற்பகல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். 

அவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மாளிகாவத்தை பகுதியிலிருந்து வருகை தந்த சுமார் 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் குழுவொன்றே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளது. 

6 பேரடங்கிய குழுவொன்று இவ்வாறு காலிமுகத்திடல் கடலில் இறங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. 

அவர்களில் மூவரே இவ்வாறு அலைகளில் சிக்கியுள்ளனர். 

எவ்வாறாயினும், மீட்கப்பட்ட இருவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

காணாமல் போனவரை தேடி கடற்படை சுழியோடிகள் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.




காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற மூவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர் Reviewed by Vijithan on June 10, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.