உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடையத்தில் தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் அமைதி காக்கக் கூடாது. -பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விசாரித்த பின்பு சூடு பிடித்திருக்கிறது.
தொடர்ந்து சுரேஷ் சாலே கைது செய்யப்பட்ட பின்பு தொடரும் கைதுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அதை நாங்கள் வரவேற்கிறோம். என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று (13) ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மட்டுமல்ல, இவர்கள் எங்களுடைய போராட்டத்திலே மனித உரிமை மீறியவர்கள் என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சுரேஷ் சாலே உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சம்பந்தம் இருக்கின்ற ஒரு சூழலில் விசாரிப்பதற்காக கைது செய்யப்பட்ட பின்பு, அவருடைய விடுதலையையும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்ததாக கூறப்படுகின்ற விடயத்திலே, அவர் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்பு இனவாதிகள் கொஞ்சம் பேர் அவர்களைக் காப்பாற்றுவதற்கு துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் பேசுகின்ற நாங்கள் இவ்விடையத்தில், அமைதி காணக் கூடாத, அமைதி பேணக் கூடாது என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இவர்கள் எங்களுடைய தேசத்தின் அழிவை, இளைஞர்களுடைய விசாரணை என்ற பேரிலே மிக மோசமான விசாரணைகளை செய்தவர்கள் என்ற அடிப்படையில், ஒரு ஜனாதிபதி வெல்வதற்காக ஒரு சமூகத்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கிறிஸ்தவ சமூகம் மட்டு மல்ல, அந்தோனியார் தேவாலயத்தில் வழிபாட்டிற்குச் சென்ற அனைத்து மதத்தினரும் படுகொலை செய்யப்பட்டார்கள்.
அதன் பின்பு அவர் பல லட்சங்கள் வாக்குகளால் ஜனாதிபதியாக்கப்பட்டார். இது சந்தேகத்திற்கு இடமான நிலையிலே பேசப்படுகிற விடயம்.
அந்த சந்தர்ப்பங்களில் முஸ்லிம் தீவிரவாதிகள் இதில் பங்கு பெற்றுள்ளதாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால் விசாரணையின் பின் தான் தெரியும் என்ன இதில் இருக்கும் பின்னணி என்னவென்று தெரியும். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில், தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் அமைதி காக்கக் கூடாது.
இந்த இவர்கள் மட்டுமல்ல, இனியும் மறைந்திருக்கும் அத்தனை பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கூக்குரலை, போராட்டத்தை நாங்கள் செய்தாக வேண்டும். தென்னிலங்கையிலே எங்களை அழித்தவர்களை காப்பாற்றுகின்ற ஒரு செயல்பாட்டைச் செய்கின்ற சிங்கள தேசம், அதற்கு நாங்கள் எதிர் மறையாக எங்களுடைய தமிழினம் இதற்கு, இந்த விசாரணைக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்.
மனித உரிமை மீறல் செய்தவர்களாக கருதப்படுகின்ற இந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச, இன்னும் இப்பொழுது கைது செய்யப்பட்டிருக்கும் சுரேஷ் சாலே, இன்னும் எத்தனையோ பேர்கள் கைது செய்யப் பட இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது விட்டாலும், இந்த விடயத்திலே நாங்கள் தமிழ் தரப்பு ஒற்றுமையாக, இந்த விசாரணையை துரிதப்படுத்தி இதில் சம்பந்தப் பட்டவர் களைக் கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும்.
ஒரு கவிஞனை விடுதலை செய்வதற்காக நாங்கள் குரல் கொடுத்தோமோ, எப்படி எங்களுடைய காணிகளை அபகரிக்கும் இந்த முப்படைகளுக்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்தோமோ, அப்படியான ஒரு எழுச்சிமிக்க ஒரு குரலாக தமிழ் தேசம் மாற வேண்டும்.
ஆகவே, இந்த விடயத்திலே நாங்கள் அமைதி காக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்தாக இருக்கிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படுகின்ற போது, வடக்கு கிழக்கில் இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாகவும் இவர்கள் கருதப்படுகின்ற, இவர்கள் மீது விசாரிக்கப் படுகின்ற சூழலை உருவாக்க முடியும்.
ஆகவே, இந்த விடயத்திலே தமிழ் தேசம் ஒற்றுமையாக, மிக எழுச்சியான ஒரு போராட்டத்தை நாங்கள் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்லே விசாரிக்கப் படுகின்ற அத்தனை பேரும் உண்மையைக் கண்டறிந்து தண்டிக்கப்பட வேண்டும் என்ற ரீதியிலே நாங்கள் செயலாற்றுகிற போது, வடக்கு கிழக்கில் இனப்பிரச்சினை என்ற போர்வையில் எங்களை, எங்களுடைய இளைஞர் களைச் சித்திரவதை செய்து, இளைஞர்களை எரித்துச் சாம்பலாக்கி இந்த மனித உரிமை மீறலாளர்கள் இதில் கண்டுபிடிக்க படுவார்கள் என்பது என்னுடைய கருத்து.
ஏற்கனவே நான் சொன்னது போல, துரிதமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த விசாரணை ஒரு ஒரு தீர்க்கமான ஒரு தீர்வை நீதிமன்றம் கொடுக்க வேண்டும். அதன் ஊடாக மனித உரிமை மீறல் சம்பந்தமாக இன்றைக்கு ஐ நா சபை சொல்லுகின்ற விடயங்களில் சாட்சிகளாக இந்த விடயங்கள் எங்களுடைய பக்கம் வருகிற வாய்ப்பு இருக்கிறது.
ஆகவே அரசாங்கம் காலம் தாமதம் செய்வது சில விடயங்களை பார்க்கக் கூடியதாக இருந்தாலும் கூட, இந்த விடயத்தை நான் வரவேற்கின்றேன். எதிர்க்க எதிரணியினர் தங்களுடைய பிரச்சினைகளும் தாங்களும் கைது செய்யப்படலாம்? என்ற ஒரு சந்தேகத்தில் இந்தக் கூக்குரலை இடுகிறார்கள். அது ஒரு அபாயக் கூ குரலாகத் தான் நான் பார்க்கிறேன். அவர்கள் கூக்குரல் இடலாம். சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
இந்தக் கூக்குரல் இடுபவர்களுக்குள்ளே இருப்பவர்களும் கைது செய்யப்பட வேண்டும். ஆகவே, நான் சொன்ன விடயம், தென்னிலங்கையிலே இப்படியான ஒரு கூக்குரல் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று ஒலிக்குமாக இருந்தால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ் பிரதேசத்திலே, வடக்கு கிழக்கில் மிக பாரிய அளவில் தமிழ், முஸ்லிம் மக்கள், தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கை என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
Reviewed by Vijithan
on
June 14, 2026
Rating:


No comments:
Post a Comment