அண்மைய செய்திகள்

recent
-

ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பெற்றோர்களுக்கு விசேட அறிவித்தல்

 தற்போது நிலவும் டெங்கு காய்ச்சல் பரவல் காரணமாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் சிறுவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையின் கீழ், குழந்தைகளுக்கு விரைவான மற்றும் திறமையான மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்கு பெற்றோர்கள் மற்றும் பாதுகாப்பாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என பணிப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

 

அதன்படி, குழந்தைகளை சிகிச்சைக்காகவோ அல்லது மருத்துவ ஆலோசனைகளுக்காகவோ வைத்தியசாலைக்கு அழைத்து வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பின்வரும் ஆவணங்களை கட்டாயமாக எடுத்து வருமாறு வைத்தியசாலை நிர்வாகம் பெற்றோர்களைக் கேட்டுக்கொள்கிறது:

 

  • தனிநபர் சுகாதார இலக்கம் (PHN) அல்லது பார்ஃகோட் (Barcode) அட்​டை

  • சிறுவர் சுகாதார வளர்ச்சிப் புத்தகம் அல்லது நிறை குறித்த புத்தகம்

  • மருந்துகள் அல்லது உணவு ஒவ்வாமை (Allergy) தொடர்பான அறிக்கைகள்

  • மருத்துவ ஆலோசனைப் புத்தகங்கள் (Clinic books)

  • வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட அட்டைகள் (Discharge cards) அல்லது நோய் கண்டறிதல் அட்டைகள் (Diagnosis cards)

மேலதிக தகவல்களுக்கு ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகத்தை 011 2693711 (இணைப்பு 307) என்ற இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்ளலாம்.






ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பெற்றோர்களுக்கு விசேட அறிவித்தல் Reviewed by Vijithan on July 21, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.