36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2026 _ கபடி போட்டியின்- கிளிநொச்சி மாவட்ட சாதனை வீரர்கள் கௌரவிப்பு நிகழ்வு.
தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தினால் வருடம்தோறும் நடாத்தப்படும் விளையாட்டு விழாவின் இவ்வாண்டுக்கான 36 ஆவது தேசிய இளைஞர்கள் விளையாட்டு விழா குழுப் போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது
அந்த வகையில் 36 ஆவது தேசிய இளைஞர்கள் விளையாட்டு விழாவின் கபடி போட்டிகள் இம்மாதம் 11,12 ஆம் திகதிகளில் மாத்தறை மாவட்டத்தில் நடைபெற்றது.
தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட இவ் விளையாட்டு விழாவில் கபடிப் போட்டியில் மொத்தமாக 26அணிகள் பங்குபற்றியதுடன், அப்போட்டியில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அணி சிறப்பாக விளையாடி தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்
இவ் வீரர்களை கௌரவிக்கும் முகமாக கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் தேசிய இளைஞர்கள் மன்றம் இணைந்து ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்றைய தினம் 27.07.2026 மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய இந்நிகழ்வில் தேசிய மட்ட கபடிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட கிளிநொச்சி மாவட்ட வீரர்கள் பாண்ட் வாத்தியத்தியத்துடன் மாவட்ட செயலக நுழைவாயிலிருந்து மாநாட்டு மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற கிளிநொச்சி மாவட்ட உதவிப் பணிப்பாளர்,மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,தேசிய சம்மேளன உபதலைவர், இளைஞர் கழக சம்மேளனத்தின் உறுப்பினர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள், விளையாட்டு துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Reviewed by Vijithan
on
July 27, 2026
Rating:












No comments:
Post a Comment