தேசிய நேர்மை வாரத்தின் ஐந்தாம்நாளான இன்று, “Clean and Green Mullaitivu – தூய்மையும் பசுமையும் நிறைந்த முல்லைத்தீவு” விசேட“Clean and Green Mullaitivu” தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது
தேசிய நேர்மை வாரத்தின் ஐந்தாம்நாளான இன்று, “Clean and Green Mullaitivu – தூய்மையும் பசுமையும் நிறைந்த முல்லைத்தீவு” விசேட“Clean and Green Mullaitivu” தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது!
ஜனாதிபதி செயலகத்தின் PS/CSL/Circular/10/2026 இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக, தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு, “Clean and Green Mullaitivu – தூய்மையும் பசுமையும் நிறைந்த முல்லைத்தீவு” விசேட டெங்கு ஒழிப்பு மற்றும் சுற்றாடல் தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் இன்று காலை முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் . அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
“பொது இடங்களைத் தூய்மையாகப் பேணுவதற்கான சமூக அடிப்படையிலான விழிப்புணர்வு மற்றும் செயற்பாட்டுக் குழு” என்ற எண்ணக்கருவின் கீழ், முல்லைத்தீவு நகரின் பொது இடங்கள் மற்றும் மாவட்டச் செயலக அலுவலகச் சுற்றுப்புறங்களில் தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, நீர் தேங்கக்கூடிய இடங்கள் மற்றும் நுளம்புகள் பெருகக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டதுடன், வடிகால்கள், வீதியோரங்கள், மரங்கள் நாட்டப்பட்டுள்ள பொது இடங்கள் மற்றும் அலுவலகச் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டன.
மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் இவ்வேலைத்திட்டத்தில் பங்கேற்றனர். பொது இடங்களைத் தூய்மையாகவும் பசுமையாகவும் பேணுதல், டெங்கு பரவலைத் தடுத்தல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
Reviewed by Vijithan
on
July 31, 2026
Rating:

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

No comments:
Post a Comment