அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கண்டல் தாவர நடுகைத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த கொமர்ஷியல் வங்கி

 உலக கண்டல் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான  உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கொமர்ஷியல் வங்கியின் மன்னார் கிளை, மன்னார் சவுத் பார் கடலோரப் பகுதியில் கண்டல் தாவர நடுகைத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தது.


மன்னார் சவுத் பார் இராணுவ முகாம் அண்மையிலுள்ள கடலோரப் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வங்கி ஊழியர்கள், உள்ளூர் மீனவ சமூகத்தினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ரோட்டரி கழக உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகமாக பங்கேற்று 154 கண்டல் தாவரங்களை நாட்டினர்.


கடலோர அரிப்பைக் கட்டுப்படுத்துதல், உயிரியல் பல்வகைமையைப் பாதுகாத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்நடுகைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும் என்ற எண்ணத்தை வலியுறுத்திய இந்நிகழ்வு, எதிர்கால சந்ததியினருக்காக நிலையானதும் பசுமையானதுமான சூழலை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தது.


இந்த முயற்சியின் மூலம், நிலையான வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குமான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை கொமர்ஷியல் வங்கி தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனை குறிப்பிடத்தக்கது.
















மன்னாரில் கண்டல் தாவர நடுகைத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த கொமர்ஷியல் வங்கி Reviewed by Vijithan on July 31, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.