அண்மைய செய்திகள்

recent
-

136 ஆவது தேசிய தொல்லியல் தினத்தையொட்டி மன்னாரில் நினைவூட்டல் நிகழ்வு

 மன்னார் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் புதன்கிழமை (15) காலை மன்னார் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.



-வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செனரத் விக்கிரமசிங்க  கலந்து கொண்டார்.


மேலும் வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


இதன் போது 136 ஆவது தேசிய தொல்லியல் தினம் தொடர்பான நினைவூட்டல்கள் இடம் பெற்றதோடு மன்னார் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.


'மர புரிமைக்கு ஓர் உயிரோட்டம்' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள்,மாவட்டச் செயலக அதிகாரிகள்,திணைக்கள தலைவர்கள்,பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.














136 ஆவது தேசிய தொல்லியல் தினத்தையொட்டி மன்னாரில் நினைவூட்டல் நிகழ்வு Reviewed by Vijithan on July 15, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.