மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம் - எல் நினோ (EL Nino) காலநிலை தாக்கம் விவசாயத் துறையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் விசேட கலந்துரையாடல் முன்னெடுப்பு.
மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம் மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இன்று புதன்கிழமை (15) மாலை 4 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
எல்நினோ (EL Nino) காலநிலை தாக்கம் விவசாயத் துறையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில், அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு, விவசாயிகளுக்கு போதிய அறிவுறுத்தல்களும் விழிப்புணர்வையும் வழங்கி, அதன் ஊடாக இந்த கால நிலைக்கு சவாலை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்ற பயிர்ச்செய்கை திட்டமிடலை மேற்கொள்வதற்கான கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கால நிலைத் தாக்கமானது 2026,2027 ஆம் ஆண்டு வரை தொடரும் என்று எதிர்வு கூறப்பட்டிருக்கின்றது. அதன் அடிப்படையில் இதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தேசிய மட்டத்திலும், ஏனைய பிரதேசங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.
வட மாகாணத்தில் விசேட கூட்டத்தை ஏற்பாடு செய்து எவ்வாறு காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஒரு விசேட கலந்துரையாடல் விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை மற்றும் அதனோடு இணைந்த நிறுவனங்கள் அழைக்கப்பட்டு ஏற்கனவே ஒரு கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் மாவட்ட ரீதியாக ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு சூழ்நிலை, அதற்குரிய நிலப் பயன்பாடு, அந்த நிலச் சூழ் நிலைக்கு ஏற்ற வகையில் மாவட்ட விவசாயத் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதன் ஊடாக அந்த விவசாயத் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், மன்னார் மாவட்டத்தின் முதலாவது கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.
-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவசிறி,மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் அ.சசிகலா பானு,மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீப்,விவசாய திணைக்கள அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,விவசாயிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
July 15, 2026
Rating:
%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%20(2).jpg)

No comments:
Post a Comment