அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி; சந்திரிகாவிடம் விசாரணை?

 யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் முறையான விசாரணைகளை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் ரவிகரன் எம்.பி.  உரையாற்றுகையில் , “செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் கைதி ஒருவர், முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஊடாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.



குறித்த கைதிக்கு ‘பொதுமன்னிப்பு’ வழங்குவதாகவும், புதைகுழி தொடர்பான எந்தவொரு விடயத்தையும் வெளியே கூற வேண்டாம் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



எனவே, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உண்மைகளை மூடிமறைக்க நடந்த முயற்சிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் உரிய விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.




யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி; சந்திரிகாவிடம் விசாரணை? Reviewed by Vijithan on July 08, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.