அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை உலக சுற்றுலா தின விழா நடத்த ஏற்பாடு

 வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும்  25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள  உலக சுற்றுலா தின விழா தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்     வடமாகாண  சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன்  பங்கேற்புடன்  மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.


உலக சுற்றுலா தினத்தை   இம்முறை மன்னாரில் வெகு விமர்சையாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


  எதிர்வரும்  25ஆம் திகதி முதல்  27 ஆம் திகதி  வரை கீரி கடற்கரையில்  மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை முன்னெடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   


குறித்த நிகழ்வு குறித்து ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்ற தவிசாளர் கள்,சுற்றுலாத்துறை சார்ந்தோர் திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


மன்னார் நகரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீரி கடற்கரை பகுதியில்    மிகவும் சிறப்பாக நடைபெறுவதற்கு உரிய  ஆயத்தங்ககள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.


 தெற்கில் இருக்கும் உல்லாச பயணிகள் மற்றும் இந்தியாவில் இருந்து வரக்கூடிய உல்லாச பயணிகளும் குறித்த சுற்றுலா தின விழாவில் கலந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 


  மன்னார் மாவட்டத்தினுடைய பொருளாதார ஸ்திரத்தன்மை யை மேம்படுத்தும் வகையில் இடம்பெற உள்ள உலக சுற்றுலா தின விழாவில்  மாவட்டத்தில் உள்ள உள்ளூர்    உற்பத்தியாளர் களின் உதவியுடன்   உணவுத் திருவிழா வும் முன்னெடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.


 மேலும் கைவினை தொழில் காட்சி, மாயாஜால காட்சிகள்,  மன்னார் மாவட்டத்திற்கு உரித்தான விசேட விளையாட்டு போட்டிகள், சிறுவர் போட்டிகள் என பலவித நிகழ்வுகள் குறித்த மூன்று தினங்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை முன்னெடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  சுற்றுலா தின விழா வின் போது   சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில்  மன்னார் மாவட்டத்திற்கு உரித்தான விசேடமான சுற்றுலா தளங்களை யும்  சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


சுற்றுலா பயணிகளின் நலன் கருத்தில் கொண்டு  ராமர் பாலத்துக்கான படகு சேவைகள் அன்றைய தினம் ஆரம்பிக்கப்பட உள்ளது.


 அதன்   ஒரு கட்டமாக தலைமன்னார் கலங்கரை விளக்கம்,  மன்னார்  நுழைவாயிலில் இருக்கின்ற 16-ஆம் 17-ஆம் நூற்றாண்டுக்கு உரித்தான கோட்டை (Fort),   தலைமன்னார் ராமேஸ்வரத்திற்கு அண்மித்தது இருக்கின்ற சில தீவுகள்,  அனைத்து இடங்களுக்கும்   விஜயம் செய்து, இந்த மன்னார் மாவட்டத்தை இலங்கையின் ஒரு பிரசித்தமான ஒரு சுற்றுலா தளமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 





மன்னாரில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை உலக சுற்றுலா தின விழா நடத்த ஏற்பாடு Reviewed by Vijithan on September 11, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.