அண்மைய செய்திகள்

recent
-

MBBS 16 பட்டமளிப்பு விழா ; பதக்கங்க பெற்று சாதனை படைத்த மாணவி!

  கொழும்பு பல்கலைக்கழகத்தின் (University of Colombo) மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவில் (General Convocation 2025), MBBS மருத்துவப் படிப்பிற்காக வழங்கப்பட்ட மொத்தமுள்ள 32 தங்கப் பதக்கங்களில் 16 தங்கப் பதக்கங்களை ஹஷினி ரங்கிக எப்பா ஆரச்சி வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.


கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று பக்கங்களில், ஹஷினி ரங்கிக எப்பா ஆரச்சி என்கின்ற பெயர் தங்க எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது.



 முதல் வகுப்புச் சிறப்புத் தேர்ச்சி 


2025 பொதுப் பட்டமளிப்பு விழாவில் MBBS மருத்துவப் படிப்பிற்காக வழங்கப்பட்ட மொத்தம் 32 தங்கப் பதக்கங்களில், 16 பதக்கங்களை ஹஷினி ரங்கிக எப்பா ஆரச்சி வென்றுள்ளார்.


இறுதித் தேர்வு உட்பட MBBS படிப்பின் ஐந்து முக்கிய பிரிவுகளிலுமே முதல் வகுப்புச் சிறப்புத் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார் ஹஷினி ரங்கிக எப்பா ஆரச்சி .




மேலும், இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவப் பீட பட்டதாரிகளுக்குமான பொதுத் தரவரிசைப் பட்டியலில் நாடு முழுவதுமாக முதலிடம் பிடித்து, மருத்துவப் பயிற்சிப் பணிக்காக தேர்வாகியுள்ளார்.


அத்துடன், கல்விச் சிறப்பிற்காக வழங்கப்படும் உயரிய விருதான "பேராசிரியர் திலக் ஹெட்டியாரச்சி விருது" (Professor Tilak Hettiarachchy Award for Academic Excellence) இவருக்கு வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது. 





MBBS 16 பட்டமளிப்பு விழா ; பதக்கங்க பெற்று சாதனை படைத்த மாணவி! Reviewed by Vijithan on September 11, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.