சாகும் வரை ஈழம் கேட்க மாட்டேன் ; அர்ச்சுனா எம்.பியின் பேச்சுக்கு விமர்சனம்
2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.
அரசியல் தீர்வு
தனக்கு "கருநாக்கு" இருப்பதாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் முன்னர் கூறிய பல அரசியல் கணிப்புகள் உண்மையாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
அந்தவகையில், எதிர்காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டாலும் அல்லது என்ன தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவதைத் தடுக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு உரிய அரசியல் தீர்வு காண்பதற்கு, வடக்கையும் தெற்கையும் இணைக்கும் தலைவராக நாமல் ராஜபக்ஷவே திகழ்வார் என்றும், அவருக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், தான் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழக் கோரிக்கையை முன்வைக்கப்போவதில்லை என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் பயணத்தைத் தடுப்பதற்காக தன் மீது 29 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், தற்போதைய ஆட்சிமுறைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறைகள் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.
அர்ச்சுனா எம்.பியின் இந்த கருத்துக்களுக்கு சமூக ஊடகங்களில் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
September 13, 2026
Rating:


No comments:
Post a Comment