அண்மைய செய்திகள்

recent
-

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி – 2026

 மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுத் திறன்கள், தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கில், இன்று (06.10.2026) மன்னார் மாவட்ட நகர சபை மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.


மன்னார் மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, உதவி அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுத் திறன்களைப் பாராட்டி, அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் ஊக்கத்தையும் தெரிவித்தார்.


மேலும், அருட்தந்தையர், மேலதிக அரசாங்க அதிபர், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவைத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஊக்குவிப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


💐 “மாற்றுத்திறன் ஒரு தடையல்ல; திறமையை வெளிப்படுத்துவதற்கான புதிய பாதை.”


மாற்றுத்திறனாளிகளின் திறமைகளையும் உரிமைகளையும் அங்கீகரித்து, அவர்களை சமூகத்தின் அனைத்து துறைகளிலும் சமமாகவும் கௌரவமாகவும் பங்கேற்கச் செய்வதற்கான இத்தகைய நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவது மிகவும் முக்கியமானதாகும்.


மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை மதிப்போம் – வாய்ப்புகளை உருவாக்குவோம் – அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை கட்டியெழுப்புவோம்














மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி – 2026 Reviewed by Vijithan on October 06, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.