அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் விவசாய நடவடிக்கைகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்.

 இலங்கை  தொகை மதிப்பு  புள்ளி விபரத் திணைக்களத்தினால் 10 வருடங்களுக்கு ஒரு முறை முன்னெடுக்கப்படுகின்ற குடிசன தொகை மதிப்பீட்டின் பின்னர் மேற்கொள்ளப்படுகின்ற பொருளாதார  கணக்கெடுப்பின் முதலாவது நடவடிக்கையாக விவசாய நடவடிக்கைகளின் கணக்கெடுப்பு ஆரம்ப நிகழ்வு இன்று (1)வியாழக்கிழமை காலை மன்னாரில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.


மன்னார் பெரிய கடை கிராம அலுவலர் பிரிவில் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.


 குறித்த ஆரம்ப நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்,மன்னார் மாவட்ட புள்ளி விபர திணைக்கள அதிகாரிகள்,விவசாய திணைக்கள உதவி பணிப்பாளர், உள்ளடங்களாக திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.


ஆரம்ப நிகழ்வை தொடர்ந்து பெரிய கடை கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்ற அதிகாரிகள் பதிவுகளை வைபவ ரீதியாக ஆரம்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.





மன்னாரில் விவசாய நடவடிக்கைகளின் கணக்கெடுப்பு ஆரம்பம். Reviewed by Vijithan on October 01, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.