PSTA மற்றும் OCB சட்டமூலங்களுக்கு தமிழரசுக் கட்சி கடும் எதிர்ப்பு
பயங்கரவாதத்திடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை நிறைவேற்றுவதைத் தடுத்து நிறுத்தக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், அதற்காக அனைவரும் இணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே எம்.ஏ. சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒழிக்கப்படும் வேளையில் அதற்கு மாற்றாக ஒரு சட்டமல்ல, இரண்டு சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.
இந்த இரண்டு சட்டங்களிலும் ஆபத்தான நிலைமை காணப்படுகிறது. இந்தச் சட்டங்கள் இரண்டையும் நிறைவேற்றிக் கொண்டால் அரசாங்கத்திற்கு எதிராக யாரும் வீதிக்கு இறங்க முடியாது.
அதனால் தற்போது நாம் கட்டியெழுப்பும் போராட்டத்தின் மூலமாகவே இதனைத் தடுத்து நிறுத்த முடியும்.
எமக்கு இருப்பது குறுகிய காலமே, நாம் நாடளாவிய ரீதியில் கடுமையான போராட்டங்களைக் கட்டியெழுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Reviewed by Vijithan
on
November 17, 2026
Rating:


No comments:
Post a Comment