அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஓய்வு

 இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவரும் கோல் காப்பாளருமான சுஜான் பெரேரா சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.

 

நீண்ட காலமாக இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நாட்டுக்காக அர்ப்பணிப்புடனும் பெருமையுடனும் விளையாடிய சுஜான் பெரேரா, தனது ஓய்வுபெறும் முடிவை உத்தியோகபூர்வ கடிதம் மூலம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமருக்கு அறிவித்துள்ளார்.

 

அக்குறிப்பிட்ட கடிதம் மூலம், தனது விளையாட்டு வாழ்வு முழுவதும் தனக்கு வழங்கப்பட்ட ஆதரவுக்கும் ஊக்கத்துக்கும் தலைவருக்கும் இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கும் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

 

நாட்டுக்காக நீண்ட காலம் சேவையாற்றிய இந்தத் தலைவரின் அர்ப்பணிப்பையும் பங்களிப்பையும் கௌரவிக்கும் வகையில், 2027 மார்ச் மாதம் கொழும்பில் நடைபெறும் சர்வதேச கால்பந்து போட்டி ஒன்றின் போது விசேட பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

சுஜான் பெரேராவின் எதிர்காலத்திற்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்த இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், தாம் கொண்டுள்ள அனுபவத்தையும் அறிவையும் எதிர்கால இலங்கை கோல்காப்பாளர்களுக்கு வழங்கும் பொருட்டு, கோல்காப்பாளர் பயிற்சியளிக்கும் துறைக்குள் நுழையுமாறும் கோரிக்கை விடுத்தார்.





இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஓய்வு Reviewed by Vijithan on November 17, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.