அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச ரீதியில் சாதனை புரிந்த மன்னார் பொறியியலாளர் ம.ராஜ்குமார்-படம்

ஓய்வுபெற்ற கிராமசேவையாளர் திரு.A.மரியூஸ்  நகுலேஸ்வரி தம்பதிகளின் புதல்வனும்  மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் பாடசாலை கல்வியினை நிறைவு செய்து றுகுணு பல்கலைகழகத்தில் பொறியியலாளர் பட்டம் பெற்ற. மன்னார் மண்ணின் மைந்தன் பொறியியலாளர் திரு.ம.ராஜ்குமார் அவர்கள் அமெரிக்காவில் இடம்பெற்ற நன்னீர் சுத்திகரிப்பு நிபுணர் மாநாட்டில் கலந்து கொண்டு தனது இறுதிக்கட்ட ROS-IV Level (Reverse Osmosis Specialist - IV)லில் தேர்ச்சி பெற்று நன்னீர் மீள்சுத்திகரிப்பு நிபுணராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ROS-I, ROS-II, ROS-III என தனது மூன்று நிலைகளை (Levels) கடந்த நிலையில் தனது இறுதிக்கட்ட ROS-IV (Revers Osmosis Specialist-IV) நிலையை அமெரிக்காவில் இடம்பெற்ற மாநாட்டில் இவர் தேர்ச்சிபெற்று நன்னீர் மீள்சுத்திகரிப்பு நிபுனராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவ் ROS-IV எனும் நிலையை கடந்தவர்கள் உலகில் வெறும் 10 நபர்கள் மட்டுமே. அந்த வகையில் உலக்கின் சிறப்பு நிபுனர்கள் எனும் 10 பேரை மட்டும் உள்ளடக்கிய சிறப்பு பட்டியலில் மன்னார் மண்ணின் மைந்தன் ஒருவர் தனது கடின உழைப்பு மற்றும் திறமையினாலும் உள்ளடக்கப்பட்டுள்ளார் என்பது, மன்னார் மாவட்டமும் மக்களும் பெருமிதமடையும் நேரமிது.

 நன்னீர் மீள்சுத்திகரிப்பு நிபுணராக தெரிவுசெய்யப்பட்ட பொறியியலாளர் திரு.ம.ராஜ்குமார் அவர்கள் யாழ்ப்பாணம் நீர்ப்பாசனத்திணைக்களத்தின்  நெடுந்தீவு மக்கள் பெரிதும் எதிர் நோக்கும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில் அங்கு நிறுவப்பட்ட கடல் நீரை நன்னீராக மாற்றும் செயற்திட்டத்திற்கு சிறப்பு பொறியியலாளராக கடைமையாற்றுகிறார்.

 யாழ்ப்பாணம் நெடுந்தீவு-நைனாதீவு வல்வெட்டித்துறை போன்ற பிரதேசங்களில் நன்னீர் மீள்சுத்திகரிப்பு செயற்திட்டத்திற்கு சிறப்பு பொறியியலாளராக கடைமையாற்றுகிறார்.

எமது மன்னார் மண்ணுக்கு பெருமை சேர்த்த  இச்சாதனையாளருக்கு நியூமன்னார்  இணைய குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
தொகுப்பு-வை-கஜேந்திரன்-



சர்வதேச ரீதியில் சாதனை புரிந்த மன்னார் பொறியியலாளர் ம.ராஜ்குமார்-படம் Reviewed by Author on September 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.