அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதி 4 மாடுகள் பலி-படம்தலைமன்னாரில் இருந்து இன்று(30) புதன் கிழமை காலை 7.10 மணியளவில் மதவாச்சியூடாக கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதி 4 மாடுகள்   உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி இசைமாளத்தாழ்வு பகுதியில் இன்று புதன் கிழமை (30)காலை 8.25 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

-தலைமன்னார் புகையிரத நிலையத்தில் இருந்து இன்று புதன் கிழமை காலை 7.10 மணியளவில் குறித்த புகையிரதம் பயணித்துள்ளது.இதன் போதே மன்னார்-மதவாச்சி பிரதான வீதி  குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

விபத்தை தொடர்ந்து புகையிரதம் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் பயணிகளுடன் மதவாச்சி நோக்கி சென்றது.

-தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதத்தில் தொடர்ச்சியாக மாடுகள் மோதி உயிரிழக்கும் சம்பவம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதி 4 மாடுகள் பலி-படம் Reviewed by Author on October 30, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.