அண்மைய செய்திகள்

recent
-

மேற்கு நாடுகளுடன் 3-ம் உலகப்போர் வெடிக்கக்கூடும்... இராணுவ தளபதி எச்சரிக்கை!


ரஷ்யா மற்றும் நேட்டோ (29 வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான ஒரு இராணுவக் கூட்டணி) சம்பந்தப்பட்ட ஆர்க்டிக் பகுதியில் போர் ஆபத்து அதிகரித்து வருவதாக கிரெம்ளின் இராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்ய வடக்கு கடற்படையின் தலைவரான வைஸ் அட்மிரல் அலெக்சாண்டர் மொய்சீவ், ரஷ்யாவிற்கும் - நேட்டோவிற்கும் இடையிலான போரின் அச்சுறுத்தல் குறித்து சிலிர்ப்பான கணிப்பை வெளியிட்டுள்ளார்.
துருவப்பகுதியில் நேட்டோ நாடுகளின் இருப்பு கணிசமாகக் அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். பிரித்தானியா மற்றும் அமெரிக்கா பிற மேற்கத்திய நாடுகளுடன் மேற்கொள்ளும் இராணுவப் பயிற்சிகள் ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளன.

ரஷ்யாவின் 15,000 மைல் ஆர்க்டிக் கடற்கரையோரத்தில் இராணுவ தளங்களை மீண்டும் திறக்கவும் நவீனமயமாக்கவும் விளாடிமிர் புடின் உத்தரவிட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"எதிர்காலத்தில், ஒருங்கிணைந்த ஆயுதப் படைகளின் இராணுவ எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதன் விளைவாக, மோதலுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்" என்று மொய்சேவ் கூறியுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில், கூட்டணி உறுப்பு நாடுகளின் கூட்டு ஆயுதப்படைகள் நமது வடக்கு எல்லைகளுக்கு அருகிலேயே பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
பயிற்சிகள் அளவு வித்தியாசமாக இருந்தன. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், கேரியர் போர் குழுக்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கை படைகள் உட்பட பிற பிரிவுகளில் இருந்து பல்வேறு ஆயுதங்களை உள்ளடக்கியிருக்கிறது எனக்கூறினார்.

மேலும், நேட்டோ நாடுகள் ரஷ்ய தேசிய நலன்களை அங்கீகரிக்கத் தவறிவிட்டதாகவும், அரசியல் இலக்குகளை அடைவதற்கான வழிமுறையாக இராணுவ சக்தியைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
"அணிசேரா நாடுகளின் இராணுவ அமைப்புகள் இப்பகுதியில் அதிகளவில் இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. நேட்டோ அல்லாத நாடுகளான சுவீடன் மற்றும் பின்லாந்து, இப்போது தீவிரமாக பங்கேற்கின்றன," என்றும் அவர் கூறியுள்ளார்.
மேற்கு நாடுகளுடன் 3-ம் உலகப்போர் வெடிக்கக்கூடும்... இராணுவ தளபதி எச்சரிக்கை! Reviewed by Author on December 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.