அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மூர்வீதியில் தனியார் பேருந்துக்கு விசமிகள் தீ வைப்பு!(பட இணைப்பு)

மன்னார் மூர்வீதியில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியாருக்குச் சொந்தமான பேருந்து ஒன்று இன்று அதிகாலை இனம்தெரியாத காடையர்களினால் தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளது.

எரியூட்டப்பட்ட பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.


ஆயினும் இப்பேருந்து எரிக்கப்பட்டதற்கான காரணம் உதுவும் இதுவரை வெளியாகவில்லை.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மன்னார் மூர்வீதியில் தனியார் பேருந்துக்கு விசமிகள் தீ வைப்பு!(பட இணைப்பு) Reviewed by NEWMANNAR on July 22, 2011 Rating: 5

2 comments:

Anonymous said...

மன்னாரில் எரியூட்டப்பட்டதாக சொல்லப்படும் குறித்த பேரூந்து தொடர்பில் சம்பவத்தின் ஒருவாரகாலப்பகுதியினுள் பேரூந்து தரித்து விடப்படும் உரிமையாளருக்கு எச்செரிக்கை விடுக்கும் முகமாக யாழில் இருந்து வெளி வரும் நாளிதழ் ஒன்றில் தனிப்பட்ட ரீதியிலான பழிவாக்கலாக செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.
குறித்த செய்தி வெளியானதன் சில தினத்திலேயே மேற்படி பேரூந்தும் எரியூட்டப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பேரூந்து எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் மன்னார் தனியார் போக்கு வரத்து சங்கத்தினருக்கு கையொப்பமிடாத மொட்டைக்கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.
அக்கடிதத்தினை தயாரித்தவர், எவருமே இதுவரையில் சந்தேகப்படாத ஒன்றினை வெளிப்படுத்தி தவளை தன்வாயால் கெட்டது போன்று அந்நபரே சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
பேரூந்து எரிந்து கொண்டிருக்கும் சமயத்தில் பல்வெறு தரப்பட்டோரும் தீயினை அணைக்கும் நடவடிக்கைக்காக பரபரப்பாக இருந்தபோதும் எரியுன்ட பேரூந்தின் உரிமையாளரது வீட்டிற்கு மிக அருகில் உள்ள வீட்டுக்காரர் எவரும் இச்சம்பவத்தின் போது எட்டியும் பார்க்கவில்லையாம்.
இதுவும் பலரிற்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இது ஒருபுறமிருக்க தனியார் போக்கு வரத்து சங்கத்திற்கு சம்பவம் தொடர்பான சந்தேகத்தை மொட்டைக்கடிதம் வாயிலாக கிழப்பியிருப்பவரே செய்தி வெளியான குறித்த பத்திரிகைக்கும் அதனை அனுப்பியிருக்கலாம் என சந்தேகம் எழத்தொடங்கியிருக்கின்றது.

Anonymous said...

என்னதான் தனிப்பட்ட கோபதாபங்கள் இருந்தாலும் இப்படி அநாகரிகமாகவெல்லாம் நடக்கக்கூடாது குறித்த பேரூந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதி மக்கள் நடமாட்டத்திற்கும் பாவனைக்கும் இடையூறாக இருந்திருக்குமானால் அதை உரியவர்களுடன் பேசி ஒரு நிலைக்கு வந்திருக்கலாம்.
சொந்தம் பந்தங்களத்தவிர வேரயாரும் இப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க செய்யிரதையும் செய்துபுட்டு மொட்ட கடிதம் வேற போடிரீங்களா..?
தேவையில்லாதவன் வீட்டு வாசலில நாய் தலையை வைக்கிறாங்க உங்கட வாசலில நாய்த்தலையோடு சேர்த்து பேய்த்தலையையு வைக்கனும்..

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.