நிர்வாணமாக்கி கதறக் கதற தாக்குதல் நடத்திய படையினர்!
நாவாந்துறையில் கடந்த திங்கள் இரவு படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை தம்மைக் கைது செய்த படையினர் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கிவிட்டு, கதறக் கதறத் தாக்கினர் என்று யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பாதிக்கப்பட்டவர்கள் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
தமது கணவன்மாரை விடுவிக்குமாறு கேட்டுச் சென்ற பெண்கள் சிலரை இராணுவத்தினர் பாலியல்ரீதியில் துன்புறுத்தி மானபங்கப்படுத்தினர் என்றும் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கக் கை, கால் வளங்காமல் பாரிசவாத நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர், மாலைக் கண் நோயுள்ளவர், முள்ளந்தண்டு வளங்காதவர், மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்தவர் என்று எவரையும் விட்டு வைக்காது காட்டுமிராண்டித்தனமாக இராணுவத்தினர் தாக்கியுள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவ சோதனைகள் மற்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 22 ஆம் திகதி இரவு நவாந்துறையில் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் பின்னர் அடி தடியாக மாறியது.
இதனால் ஆத்திரமடைந்த இராணுவத்தினர் வீடுவீடாகச் சென்று ஆண்களை அடித்து இழுத்துச் சென்றனர். அதிகாலை ஒரு மணி முதல் இரண்டு மணி வரை கைது செய்யப்பட்டவர்களை சென் நீக்கலஸ் மைதானத்தில் வைத்து காலை மூன்று மணிவரை சரமாரியாகத் தாக்கினர் என்று காயமடைந்தவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
"பெண் பொலிஸார் தமது சப்பாத்துக்களைக் கழற்றி எம்மை அடித்தார்கள்'' என்று இருவர் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 102 பேரிடமும் நேற்று சட்ட மருத்துவ அதிகாரியால் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
"வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அனைவக்கும் இன்னும் மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக முடிவடையவில்லை. நேற்றிரவு நடந்த சோதனைகளில் இருந்து 22 பேருக்கு கடுமையான எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. பெரும்பாலானோருக்கு கண்டல் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மண்டை உடைந்த நிலையிலும் சிலர் இருக்கிறார்கள்'' என்று சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் தெரிவித்தார்.
"துப்பாக்கியின் பின்பக்கப் பிடியினாலும், சப்பாத்துக் கால்களாலும் உதைக்கப்பட்டதாலும், வயர்கள் மற்றும் இரும்புப் பொல்லுகளால் தாக்கப்பட்டதாலும் ஏற்பட்ட காயங்களை இவர்களது உடல்களில் காணமுடிகிறது. முழுமையான அறிக்கை நாளை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“பெண் பொலிஸார் அவர்களது சப்பாத்துக்களை கழற்றி எம்மை கண்மூடித்தனமாக தாக்கினர்” என்று செபமாலை அன்ரனி குயின் (வயது33), மரிஷ் ரொட் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர்.
“கட்டியிருந்த சாறத்தினைக் கழற்றி நிர்வாணமாக்கிவிட்டு எமது கைகளை கட்டிவிட்டு அடித்தனர்” என ரீ.அன்ரனி (வயது23), ஏ.ஆர்.சூசை, பாலதுரை சகாயராஜா (வயது33) ஆகிய மூவரும் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களில் பாலதுரை சகாயராஜா அவரது பெற்ற தாயின் முன்பாகவே நிர்வாணமாகத் தாக்கப்பட்டுள்ளார். அதனைத் தடுக்க முயன்ற அவரது தாயாரையும் இராணுவத்தினர் தாக்கியுள்ளனர்.
பாரிசவாத நோயினால் வலது கை, வலது கால் இயங்காத அல்பிரட் யூலின் (வயது 28) என்ற இளைஞரையும், மாலைக்கண் நோய் உள்ள குணராசா ராசகுமார் என்பவரையும் கைது செய்து தாக்கியுள்ளனர். மகனது நிலையைத் தடுக்க வந்த அவரது தாயாரையும் இராணுவத்தினர் தாக்கியுள்ளனர்.
மன அழுத்தம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும், முள்ளந்தண்டு வளங்காத ஜேசுகுமார் மரியதாஸ் என்பவரும்கூடக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கைது செய்து கொண்டு செல்லப்பட்ட தமது கணவன்மாரை விடுவிக்குமாறு கேட்டச் சென்ற பெண்களை பாலியல்ரீதியில் துன்புறுத்தியதுடன் இராணுவத்தினர் மானபங்கப்படுத்தியுள்ளனர்.
இராணுவத்தினர் தமது ஆடையைக் கிழித்து தகாத முறையில் நடந்து கொண்டனர் என்றும் அதனால் நெஞ்சில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்த அவர்கள் 'இதற்கு மேல் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளனர்.

Reviewed by NEWMANNAR
on
August 26, 2011
Rating:
No comments:
Post a Comment