இன்று புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியீடு
2011ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தை சேர்ந்த ரமேஷ் நிதூர்சிகா என்ற மாணவி 192 புள்ளிகளைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலாமிடத்திலுள்ளார்.
இன்று வியாழக்கிழமை புலமைப் பரிசில் பரீட்சை புள்ளிகள் நண்பகல் வேளையில் வெளியாகியது.
யாழ் மாவட்டத்தில் முதலிடம் வந்த மாணவி ரமேஷ் நிதூர்சிகா தனது ஆசிரியரின் கடுமையான உழைப்பின் காரணமாகவே தான் முதலிடத்தில் வந்ததாகவும் தான் மருத்துவத்துறையில் கல்வி கற்பதற்கு விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிக புள்ளிகளைப் பெறுவேன் என்று நினைத்துப் படித்ததாகவும் யாழ்.மாவட்டத்தில் முதலிடம் வருவேன் என எதிர்பார்க்க வில்லை எனவும் தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
September 15, 2011
Rating:

No comments:
Post a Comment