அண்மைய செய்திகள்

recent
-

அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் விடத்தல் தீவு கிராமிய சுகாதார நிலையம்

 மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விடத்தல் தீவு கிராமிய சுகாதார நிலையம் இதுவரையில் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி இயங்கி வருவதாக மாந்தை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜேம்ஸ் சுதாகரன் தெரிவித்தார்.


விடத்தல் தீவு கிராமிய சுகாதார நிலையத்தில் 6 சுகாதார பணியாளர்களும் 2 தொண்டர்களும் அடங்கலாக 8 பணியாளர்கள் மாத்திரமே கடமையாற்றி வருகின்றனர்.

குறித்த வைத்தியசாலையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இது வரை செய்து கொடுக்கப் பட வில்லை குறிப்பாக கர்ப்பிணி தாய் மார்களை சாதாரண முறையில் பரிசோதனை செய்யக்கூடிய வகையில் கூட எவ்வித வசதிகளும் இல்லை எனவும் அவர் கூறினார்.

அது மாத்திரமின்றி குடி நீர்வசதி ,மலசல கூடம் ஆகிய வசதிகள் கூட விடத்தல் தீவு கிராமிய சுகாதார நிலையத்தில் இல்லை என தெரிவித்த அவர் மேற்படி குறைபாடுகள் குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி வசதிகளை ஏற்படுத்தி தருமாறு உரிய அதிகாரிகளிடம் கோரியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் விடத்தல் தீவு கிராமிய சுகாதார நிலையம் Reviewed by NEWMANNAR on October 30, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.