நூற்றுக் கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் விடைபெற்றார் டில்ருக்சன்-[ படங்கள் இணைப்பு ]
இன்றைய இறுதி வணக்க நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இறுதி வணக்க நிகழ்வுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், சி.சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசனும்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொ.கஜேந்திரகுமார், செ.கஜேந்திரன், சிவாஜிலிங்கம், சோசலிச சமத்துவக் கட்சியின் சிறிதுங்க ஜெயசூரிய, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி மற்றும் த.தே.கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இவ் வணக்க நிகழ்வில் நலந்து கொண்டு உரையாற்றிய அனைவரும்,
இது திட்டமிடப்பட்ட கொலையே, உரிய நீதி கிடைக்க வேண்டும். ஜனாதிபதி மன்னிப்பு கோர வேண்டும். இந்தக் கொலையுடன் மட்டும் நின்று விடாது இன்னமும் உள்ளது. இதனை நிறுத்த வேண்டுமானால் நாம் அனைவரும் வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்றனர்.
எமக்கான உரிமைகளை நாம் வென்றெடுப்பதே நாம் டில்ருக்சன், நிமலரூபன் உள்ளிட்ட தமிழ்க் கைதிகளுக்கும் செய்யும் கைமாறு எனவும் உரைக்கப்பட்டது.
நூற்றுக் கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் விடைபெற்றார் டில்ருக்சன்-[ படங்கள் இணைப்பு ]
Reviewed by NEWMANNAR
on
August 11, 2012
Rating:
No comments:
Post a Comment