அண்மைய செய்திகள்

recent
-

இனியும் பொறுத்திருப்போம் என்றால் ஒரு கட்டத்தில் முள்ளிவாய்க்கால் போன்று அழித்து ஒழிக்கப்படுவோம்; செல்வம் எமம்.பி எச்சரிக்கை


நாட்டில் தமிழ் மக்களின் உயிர்கள் பறிக்கப்படுவது மலிந்துபோயுள்ள நிலையில், இனியும் பொறுத்திருப்போம் என்றால் ஒரு கட்டத்தில் முள்ளிவாய்க்கால் போன்று அழித்து ஒழிக்கப்படுவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பாஷையூரில் இன்று இடம்பெற்ற டெல்றொக்‌ஷனின் இறுதி வணக்க நிகழ்வில் கலந்து  கொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
படுகொலைகள் செய்வதில் இலங்கைதான் தற்போது சர்வதேசத்தில் முதல்நிலை பெறுகிறது. அது சிறை எனினும் சரி, நாடு எனினும் சரி. உயிர் கொலை இலங்கையில் மலிந்து போயுள்ள நிலையில், தமிழ் மக்கள் கொல்லப்பட்டால் அது விடயமாக எடுத்துக் கொள்ளப்டுவதில்லை. அரசு தமிழர்களை மிருகத்த விட மோசமாக நினைப்பதனால்தான் அவர்களுக்கு கொஞ்சம் கூட மனதில் இரக்கம் இல்லாமல் கொலை செய்ய முடிகிறது.

இன்னமும் நாம் பொறுத்திருப்போமேயானால் ஒரு கட்டத்தில் முள்ளிவாய்க்கால் போன்று அழித்து ஒழிக்கப்படுவோம். எதுவும் நடக்காது என கூற முடியாது. எதுவும் நடக்கலாம்.

நிச்சயம் ஒரு காலம் வரும். இந்த அரசும் அரச அதிபரும் இதற்கான நியாயத்தையும், பதிலையும் சொல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவர்களுக்கு நீதி தன் கடமையைச் செய்யும்.

நீதி என்பது எம் மக்களின் அவலக்குரல், துன்பம், அன்றாடம் நசுக்கப்படும் வாழ்க்கை. அவற்றை வைத்துத்தான் அரசு பதில் சொல்லியாக வேண்டும். நாம் தொடர்ந்தும் போராடுவோம். என்றார்.
இனியும் பொறுத்திருப்போம் என்றால் ஒரு கட்டத்தில் முள்ளிவாய்க்கால் போன்று அழித்து ஒழிக்கப்படுவோம்; செல்வம் எமம்.பி எச்சரிக்கை Reviewed by NEWMANNAR on August 12, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.