நட்ட ஈடு வேண்டாம்! காணிகளே வேண்டும்!- வடக்கு மக்கள் கோரிக்கை
வடக்கு கிழக்கில் அபிவிருத்திப் பணிகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகளுக்கு நட்ட ஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும், இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். நட்ட ஈட்டை பெற்றுக் கொள்ளாது காணிகளை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இந்த அரசியல்வாதியின் வழிகாட்டல்களுக்கு அமையவே தமிழ் மக்கள் நட்ட ஈட்டை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றனர் என அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சாரசபை மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றுக்காக இந்தக் காணிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை சீர்குலைக்கும் நோக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் மக்களை பிழையாக வழி நடாத்துகின்றனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நட்ட ஈடு வேண்டாம்! காணிகளே வேண்டும்!- வடக்கு மக்கள் கோரிக்கை
Reviewed by Admin
on
February 22, 2013
Rating:

No comments:
Post a Comment