(உடனடிச்செய்தி)மன்னாரில் இன்று மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.-வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஆதரவு.(படங்கள் )
மன்னார் மாவட்ட மீனவர்கள் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து இன்று 21 ஆம் திகதி வியாழக்கிழமை மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
மட்டுப்படுத்தப்பட்ட மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.
-குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இந்திய மற்றும் உள்ளுர் இழுவைப்படகுகளின் தொழில் முறைகள் முற்றாக நிறுத்தப்படுதல்,கடற்படையினரின் பாஸ் நடைமுறை நீக்கப்பட்டு அதற்குப்பதிலாக கடற்தொழிலாளர் அடையாள அட்டை மாத்திரம் வழங்கப்பட வேண்டும்,சிலின்டர் மூலம் கரையோரத்தில் தொழில் செய்வதை நிறுத்தி ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மாத்திரம் தொழில் செய்ய அனுமதித்தல் போன்ற மூன்று முக்கி கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டம் இடம் பெற்றது.
இன்று காலை 10 மணியளவில் மட்டுப்படுத்தப்பட்ட மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்கங்களின் சமாச காரியலயத்திற்கு முன் ஆரம்பமான குறித்த போராட்டம் பேரணியாக உப்பள வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதிக்குச் சென்றது.
அங்கிருந்து வைத்தியசாலை வீதியூடாக வந்து மன்னார் மாவட்டச் செயலகத்தினை சென்றடைந்தது.
பின் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர அவர்களிடம் மீனவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜரை கையளிப்பதற்காக மாவட்டச் செயலகத்திற்கு வெளியில் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர்.
இதனால் மாவட்டச் செயலக பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
நீண்ட நேரத்தின் பின் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர,மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் ஆகியோர் வெளியில் வந்து மீனவர்களுடன் கலந்துரையாடினர்.
எனினும் குறிப்பிட்ட சிலரை மட்டுமே மாவட்டச் செயலகத்தினுள் செல்லுமாறு பொலிஸார் தெரிவித்தமையினை தொடர்ந்து மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின் மட்டுப்படுத்தப்பட்ட மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறச்சங்கங்களின் சமாச தலைவர் நூர் முஹமட் முகம்மது ஆலம் தலைமைலான குழுவினர் மாவட்டச் செயலகத்தினுள் சென்று அரசாங்க அதிபருக்கு மகஜரை கையளித்து தமது பிரச்சினைகளை முன்வைத்தனர்.
எனினும் மாவட்ட அரச அதிபர் இதற்காண உறுதி மொழிகள் எவையும் வழங்க வில்லை.இந்த நிலையில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் குறித்த பிரச்சினை தொடர்பில் தாம் உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடுவதாகவும்,தமக்கு ஒரு வார கால அவகாசம் தரும்படியும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் அந்த மீனவர்கள் கோரிக்கைகளுக்கு அமைவாக ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.
குறித்த பேரணியில் மன்னார் மாவட்டத்தில் உள்ள அணைத்து மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள்,மீனவர்கள் ஆணைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த பேரணியில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தகர்களும் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவு தெரிவித்தனர்.மீனவர்கள் எவரும் தொழிலுக்குச் செல்லவில்லை.குறித்த பேரணியில் சுமார் ஆயிரக்கணக்காணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(உடனடிச்செய்தி)மன்னாரில் இன்று மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.-வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஆதரவு.(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
February 21, 2013
Rating:
No comments:
Post a Comment