அண்மைய செய்திகள்

recent
-

தனியார் பேரூந்து நடத்துனா் மீது சீருடையினா் தாக்குதல்.

            மன்னாரில் இருந்து யாழ். நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேரூந்து நடத்துநா் மீது சங்குப்பிட்டி பாலத்தில் வைத்து இராணுவத்தினா்தாக்குதலை மேற்கொண்டுள்ளனா்.
இச்சம்பவம் சென்ற வியாழக்கிழமை (14.03.2013) பி.ப 3.30 மணியளவில் சங்குப்பிட்டிப் பாலத்தடியில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடா்பில் மேலும் தெரியவருவதாவது , மன்னாரில் இருந்து பி.ப 1.30 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு யாழ் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேரூந்து சங்குப்பிட்டிப் பாலத்தடியில் இயந்திரக்கோளாறு காரணமாக மேற்குறித்த பகுதியில் நின்றுள்ளது.
இதனால் பயணிகளின் உதவியுடன் பேரூந்தைத் தள்ளி பாலத்தின் மேல் ஏற்றியுள்ளனா். இந் நிலையில் அவ்விடத்தில் நின்ற இராணுவத்தினா் நடத்துனரை அவ்விடத்தை விட்டு பேரூந்தை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளனா்.


பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்வதாக இராயணுவத்தினரிடம் நடத்துநா் தெரிவித்துள்ளார்.  இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தா்க்கத்தினால் அவ்விடத்தில் நின்ற இராயணுவத்தினரில் ஒருவா் நடத்துநா் மீது சரமாரியாகத் தாக்குதலை மேற்கொண்டார். 
குறித்த பேரூந்தில் பயணித்த பயணிகள் இதனைக் கண்ணுற்று செய்வதறியாது திகைத்து நின்றனா். நடத்துநரைத் தாக்க வேண்டாம் எனவும் இராணுவத்தினரிடம் கேட்டுக்கொண்டனா். பின்னா்  சீருடையினா் பயணிகளையும் நடத்துநரையும் அச்சுறுத்தும் வகையில் சிங்கள மொழியில் வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் அப் பேரூந்தில் பயணித்த பயணிகள் தெரிவித்தனா்.
தனியார் பேரூந்து நடத்துனா் மீது சீருடையினா் தாக்குதல். Reviewed by மன்னார் மன்னன் on March 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.