பேசாலையில் கலப்படம் செய்த இறைச்சியை விற்பனை செய்தவருக்கு விளக்கமறியல்
(1).jpg)
இதேவேளை, கலப்படம் செய்யப்பட்ட மாட்டு இறைச்சியை அழிக்குமாறும் நீதவான் கூறினார்.
மாட்டு இறைச்சியை கலப்படம் செய்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் இச்சந்தேக நபரை பொதுச் சுகாதார அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்து மன்னார் மாவட்ட நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
மன்னார், பேசாலை பகுதியிலுள்ள இறைச்சி விற்பனை நிலையமொன்றில் புதிய மாட்டு இறைச்சியும் பழுதடைந்த மாட்டு இறைச்சியும் கலப்படம் செய்து விற்பனை செய்வதாக பொதுமக்கள் மன்னார் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை தகவல் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து இந்த இறைச்சி விற்பனை நிலையத்திற்கு சென்று சோதனையிட்டபோது, கலப்படம் செய்யப்பட்ட மாட்டு இறைச்சியை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாகவும் மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஞானசீலன் குணசீலன் தெரிவித்தார்.
பேசாலையில் கலப்படம் செய்த இறைச்சியை விற்பனை செய்தவருக்கு விளக்கமறியல்
Reviewed by NEWMANNAR
on
March 17, 2013
Rating:
(1).jpg)
No comments:
Post a Comment